'என் நாட்டுக்கு சேவை செய்யப் போகிறேன்'

73087பார்த்தது
ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக போரிட இஸ்ரேல் நாட்டு மக்கள் அதிக அளவில் இஸ்ரேல் ராணுவத்தில் இணைந்து வருகின்றனர். அந்நாட்டைச் சேர்ந்த பிரபல பத்திரிக்கையாளர் ஹனன்யா நஃப்தலி, தனது மனைவியை விட்டு பிரிந்து இஸ்ரேலின் சார்பாக போர்க்களத்தில் போராடப் போவதாக அறிவித்துள்ளார். 'நான் என் நாட்டுக்கு சேவை செய்யப் போகிறேன். என் மனைவியிடம் விடைபெற்று விட்டேன்' என சமூக வலைதளங்களில் உணர்ச்சிவசப்பட்டு தெரிவித்துள்ளார். இதனிடையே, காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தினால் பிணைக் கைதிகளை கொலை செய்வோம் என ஹமாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி