தெலங்கானா மாநிலம் ஹனம்கொண்டா மற்றும் வாரங்கல் ஆகிய இரண்டு பகுதிகளுக்கு இடையே மலை உச்சியில் அமைந்துள்ளது பத்ரகாளியம்மன் கோயில். தன்னுடைய கண்களால், தீர்க்கமாக பார்த்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் இந்த அன்னையின் கண்கள், அபிஷேகம் செய்யும்போது மூடிக்கொள்வது போன்ற தோற்றத்தில் காட்சியளிப்பது ஆச்சரியம் அளிப்பதாக இருக்கிறது. அபிஷேகப் பொருட்கள் வடிந்ததும் மீண்டும் கண்களை திறந்து கொள்கிறாள் அம்பாள்.