உலகக் கோப்பை தொடரில் சென்னையில் கடந்த 8ஆம் தேதி நடைபெற்ற ஆஸி.க்கு எதிரான போட்டியில், இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற செய்த கோலி-ராகுல் ஜோடி, வெயிலுக்கு எதிராக தங்களது
போராட்டம் குறித்து பேசியுள்ளனர். பேட்டிங் செய்தபோது வெயிலால் மிகவும் சோர்வடைந்ததாகவும், இதனால் மிகவும் சிரமப்பட்டு பேட்டிங் செய்ததாகவும் கூறினர். ஆனாலும், இந்த கடினமான நாளில் போராடி வெற்றி பெற்றோம் என்று அவர்கள் தெரிவித்தனர். இந்த போட்டியில் கே.எல்.ராகுல் 97, கோலி 85 ரன்கள் குவித்தனர்.