சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், ஞானசேகரன் குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. வழக்கின் தீர்ப்பையொட்டி புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ஞானசேகரன் மகளிர் நீதிமன்றத்துக்கு நேரில் அழைத்து வரப்பட்டு இருந்தார். வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டதைத்தொடர்ந்து அவர் மீண்டும் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். ஞானசேகரனின் தண்டனை விபரம் ஜூன் 2ல் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.