தமிழகத்தை உலுக்கிய சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது. அவருக்கான தண்டனை விபரம் ஜூன் 2ஆம் தேதி அறிவிக்கப்படுகிறது. நீதிமன்றத்தில் ஞானசேகரன், "எனக்கு 8 வயது பெண் குழந்தை உள்ளது. அப்பா இல்லை. அம்மா மட்டும் தான், அவரும் உடல்நிலை சரியில்லாமல் உள்ளார். எனவே எனக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும்" என கோரினார்.