அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி, வேறு யாருக்கும் தொடர்பு இல்லை என சென்னை காவல் ஆணையர் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த காவல் ஆணையர் அருண், "குற்றம் நடக்கும்போது ஞானசேகரனின் மொபைல் Airplane modeல் இருந்துள்ளது. குற்றவாளி யாரிடமும் போனில் 'சார்' எனப் பேசவில்லை. மாணவியை மிரட்டுவதற்காக அப்படிச் சொல்லியுள்ளார்" என்று விளக்கமளித்துள்ளார்.