அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி ஞானசேகரனுக்கு இன்று (ஜூன் 2) தண்டனை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று ஞானசேகரன் சென்னை மகளிர் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டுள்ள ஞானசேகரனுக்கு சிறைத் தண்டனை & அபராதம் தொடர்பான அறிவிப்பை சில நிமிடங்களில் நீதிபதி ராஜலட்சுமி அறிவிப்பார். ஞானசேகரனுக்கு உச்சபட்ச தண்டனை விதிக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்திருப்பது குறிப்பிடத்தக்கது.