அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்னும் சில நிமிடங்களில் தீர்ப்பு வழங்கப்படுகிறது. சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ஞானசேகரன், காவல்துறையினரின் பலத்த பாதுகாப்புடன் மகளிர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். சுமார் 5 மாதங்களில் வழக்கு விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு இருக்கிறது. இன்று (மே 27) வழங்கப்படும் தீர்ப்பை எதிர்பார்த்து ஒட்டுமொத்த தமிழகமும் காத்திருக்கிறது. பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பைத் தொடர்ந்து இவ்வழக்கில் நீதி நாட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.