சாட்டை மீது சந்தேகம் இருந்தால், திமுக அமைச்சர்கள் எனது இல்லத்திற்க்கு வாங்க, உணவு அளித்து சாட்டையை கொடுக்கிறேன் இரண்டு அடி அடிச்சிக்கோங்க என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, "கோவையில் உள்ள எனது வீட்டிற்கு விருந்தாளியாக வாங்க. சாப்பிட்ட பிறகு அந்த சாட்டையை தருகிறேன். 6 அடி வேண்டாம், 2 அடி அடிச்சிக்கோங்க. சாட்டையின் மீது உள்ள சந்தேகம் தீரும்" என்று தெரிவித்துள்ளார்.