நாமக்கல் மாவட்டம் பெருமாபட்டி அரசுப் பள்ளியில் மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், பள்ளியை முற்றுகையிட்டு, ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தலைமை ஆசிரியர் மற்றும் வட்டார கல்வி அலுவலரிடம் புகாரளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டுகின்றனர். தொடர்ந்து, போலீசில் புகார் அளித்த நிலையில், பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் செல்வக்குமாரை கைது செய்தனர்.