பீகார்: பிங்கி குமாரி என்ற 15 வயது சிறுமிக்கு இதய நோய் இருந்த நிலையில் வீட்டின் அருகே அதிக சத்தத்தில் DJ இசை ஒலித்தது. இதனால் குமாரிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு சரிந்து விழுந்தார். பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் உயிரை காப்பாற்ற முடியவில்லை. இந்நிலையில் குமாரி நெஞ்சு வலியால் துடித்த போதும் மருத்துவர்கள் உடனடியாக சிகிச்சை அளிக்காமல் தாமதப்படுத்தியதால் அவர் உயிரிழந்தார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போலீஸ் விசாரிக்கிறது.