மும்பையில் விளையாட பெற்றோர் செல்போன் தராத ஆத்திரத்தில் 14 வயது சிறுமி தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பை, ஆறே காலனியில் 14 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வந்தார். செல்போனுக்கு அடிமையான சிறுமியிடம் இருந்து, சம்பவத்தன்று பெற்றோர் செல்போனை பறித்துள்ளனர். இதனால் வேதனையடைந்த சிறுமி வீட்டின் அறையில் தற்கொலை செய்துகொண்டார். இந்த விஷயம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.