சிறுமியை தாக்கிய காளை - சிசிடிவி வீடியோ

52159பார்த்தது
சிறுமி ஒருவர் தனது சகோதரியுடன் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த போது காளை மாடு தாக்கியது. உத்தர பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டா தாத்ரி பகுதியில் சமீபத்திய இச்சம்பவம் நடந்துள்ளது. காளை தன் கொம்புகளால் குழந்தையை தாக்கியது. உடனே அருகில் இருந்தவர்கள் சிறுமியை எழுப்பி ஓரமாக அழைத்துச் சென்றனர். காளை தாக்கியதில் சிறுமி காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுமியை காளை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி