வாடிக்கையாளர்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், டிரையம்ப் நிறுவனம் ஸ்பீடு 400 மாடல் வாங்குவோருக்கு ரூ.7,600 மதிப்புள்ள அக்சஸரீக்களை இலவசமாக வழங்குகிறது. இந்த சலுகை ஜூலை 31 வரை மட்டுமே இருக்கும் என தெரிவித்துள்ளது. மேலும், இந்நிறுவனத்தில் முதல் முறையாக பைக் வாங்குபவர்களுக்கு மட்டும் தான் இந்த சலுகை பொருந்தும். இந்த சலுகையின் கீழ், டிரையம்ப் வாடிக்கையாளர்கள் டேங்க் பேட், டிரான்ஸ்பேரண்ட் விண்ட்ஸ்கிரீன், முழங்கால் பேட்கள் மற்றும் லோயர் எஞ்சின் பார் உள்ளிட்டவைகளைப் பெறமுடியும்.