கனியாமூர் சக்தி பள்ளி பிளஸ் 2 தேர்வில் அசத்தல்

85பார்த்தது
கனியாமூர் சக்தி பள்ளி பிளஸ் 2 தேர்வில் அசத்தல்
கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்தனர். மாணவி ஸ்ரீமதி 589 மதிப்பெண் பெற்று, பள்ளியில் முதலிடம், மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றார். மாணவி பூவிதா 577 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் இரண்டாமிடம், மாணவி வித்யா 574 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பிடித்தனர். 550க்கு மேல் 7 பேர், 500க்கு மேல் 14 பேர் மதிப்பெண் பெற்றனர். சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவிகள் சி.இ.ஓ., முருகனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி, 2022 ஜூலை 13ல் மர்மமான முறையில் இறந்தார். மாணவியின் மரணத்துக்கு, பள்ளி நிர்வாகமே காரணம் எனக்கூறி, ஜூலை, 17ல் போராட்டம் நடந்தது. பின், அந்தப் போராட்டம் திடீரென வன்முறையாக மாறி பள்ளி சூரையாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி