நாமக்கல் மாவட்டம் அருகே தோட்டத்து வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை நகைக்காக கொலை செய்த சம்பவ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குளத்துப்பாளையத்தில் தோட்டத்து வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி சாமியாத்தாளிடம் நேற்றிரவு (ஜூன் 7) ஒரு கும்பல் சென்றுள்ளது. தொடர்ந்து கத்தியை காட்டி மிரட்டி, வீட்டில் இருந்த நகைகளை எடுத்துவர கூறியுள்ளனர். அப்போது மூதாட்டி கூச்சலிடவே, கழுத்து மற்றும் முகத்தில் கொள்ளையர்கள் கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பிச்சென்றனர்.