பீகார்: இளைஞர் ஒருவர் தான் காதலிக்கும் வேறு சமூகத்தை சேர்ந்த இளம்பெண்ணுடன் வீட்டை விட்டு ஓடினார். அவர்களை இளம்பெண்ணின் குடும்பத்தினர் கண்டுபிடித்தனர். இதையடுத்து இளைஞர் முகத்தில் கருப்பு மை பூசப்பட்டு, மொட்டை அடிக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டார். இது தொடர்பான புகாரில் இளம்பெண்ணின் சகோதரரை போலீசார் கைது செய்தனர். சாதி பிரச்சனையில் இது நடக்கவில்லை என தெரிவித்த போலீசார் தொடர்ந்து விசாரிப்பதாக கூறினர்.