போலீஸ்காரர்களை கல்லால் அடித்த கும்பல்.. காவலர் பலி

51பார்த்தது
போலீஸ்காரர்களை கல்லால் அடித்த கும்பல்.. காவலர் பலி
மத்திய பிரதேச மாநிலம் மவுகஞ்ச் மாவட்டத்தில் பிணைக் கைதியாக பிடித்து வைக்கப்பட்டிருந்த நபரை மீட்பதற்காக காவல் துறை அதிகாரிகள் சென்றனர். தொடர்ந்து அவர்களுடன் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். அப்போது திடீரென அந்த கும்பல், காவல் துறையினர் மீது கற்களை வீசத் தொடங்கியது. இதில், காவல் துறையினர் பலத்த காயமடைந்த நிலையில் உதவி ஆய்வாளர் ராம்சரண் கவுதம் என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி