இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் தாயார் சீமா கம்பீருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதால், அருகில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த செய்தியை அறிந்த உடன், இங்கிலாந்தில் உள்ள கம்பீர் இந்தியா விரைந்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாட இருப்பதால், அவர் அந்நாட்டிற்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.