சென்னையில் நடைபெற்ற கலைத் திருவிழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “மாணவர்கள் ஒவ்வொருவரின் முகத்தை பார்க்கும் போதும் எதிர்கால கலைஞரின் முகத்தை பார்ப்பது போல் இருக்கிறது. ஒரு சமூகம் பண்பட்ட சமூகமாக இருக்க அதற்கு கலை உணர்ச்சி இருக்க வேண்டும். முத்தமிழறிஞர் கலைஞருக்கு, எழுத்தாளர், அரசியல்வாதி, முதலமைச்சர் என அடையாளம் இருந்தாலும், 'கலைஞர்' என்ற அடையாளமே நிலைத்தது. அதுபோல, இங்கு கூடியுள்ள மாணவ செல்வங்கள் ஒவ்வொருவரும் மிகச்சிறந்த கலைஞர்களாக அடையாளப்படுகிறீர்கள்” என்றார்.