மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் தேவைக்கு ஏற்ப கழிப்பறை வசதி இல்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது. இந்த கோரிக்கையை ஏற்று சித்திரை வீதிகளில் ரூ.30 லட்சத்தில் கட்டப்பட்ட கூடுதல் கழிப்பறை கட்டடத்தை நேற்று (ஜுன் 18) அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் இந்திராணி, மண்டல தலைவர் பாண்டிச் செல்வி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.