உத்தரப்பிரதேசத்தின் தியோரியா மாவட்டத்தில் ஜனவரி 3 ஆம் தேதி நடந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ருத்ரம்பூர் காவல் நிலையப் பகுதியில் 15 வயது சிறுவன் ஒருவன் அவனது இரண்டு நண்பர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டான். அந்தச் சிறுவனுக்கு போதை மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதைப் பற்றி யாரிடமாவது சொன்னால் கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளனர். சிறுவன் நடந்ததை தனது பெற்றோரிடம் கூற, அவர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.