பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றார். நேற்று ஜூன் 08 நடந்த இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் அல்காரஸ் இத்தாலியின் ஜானிக் சின்னரை எதிர்கொண்டார். டைபிரேக்கர் வரை நீடித்த இப்போட்டியில் அல்காரஸ் 4-6, 6-7 (4-7), 6-4, 7-6 (7-3), 7-6 (10-2) என்ற செட் கணக்கில் சின்னரை வீழ்த்தி பட்டம் வென்றார். சுமார் 5 மணி 29 நிமிடங்கள் நீடித்த இந்தாட்டம், பிரெஞ்சு ஓபன் வரலாற்றில் அதிக நேரம் நடந்த இறுதிப்போட்டியாக பதிவானது.