தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ளதால் மக்கள் வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். இதிலிருந்து விடுபடவும், வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்படாமல் இருக்கவும் முதற்கட்டமாக தமிழகம் முழுவதும் 48 முதல்நிலைக் கோயில்களில் இலவச நீர் மோர் வழங்கும் திட்டம் இன்று தொடங்கி வைக்கப்படஉள்ளது. அதுமட்டுமின்றி கோயில் பிரகாரங்களில் கருங்கல் தளங்களில் கயிற்றாலான விரிப்புகள் பயன்படுத்தப்பட உள்ளது.