சென்னையில் வசிக்கும் மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அடுத்த 6 மாதங்களுக்கான டோக்கன்கள் இன்று (ஜூன் 21) முதல் வரும் ஜூலை 31-ம் தேதி வரை, காலை 8 மணி முதல் இரவு 7:30 மணி வரை வழங்கப்பட உள்ளது என MTC அறிவித்துள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வருபவர்கள் குடும்ப அட்டை, வயது சான்று மற்றும் 2 புகைப்படங்களை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.