9 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளில் இன்று(மே 13) நான்காம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில், '56 ஸ்டாக்' உணவகம் இலவச காலை உணவை வழங்குகியது. காலை 7-9 மணிக்குள் வாக்களித்தவர்களுக்கு போஹா (அவல் கிச்சடி), ஜிலேபி மற்றும் ஐஸ்கிரீம் வழங்கப்பட்டது. ஜனநாயக கடமை ஆற்றியவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த இலவச காலை உணவு வழங்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். கடந்த தேர்தலிலும் 5-6 ஆயிரம் பேருக்கு இலவச உணவு வழங்கியதாக கூறியுள்ளனர்.