ஏடிஎம் கொள்ளை கும்பல் தற்போது நூதன முறையில் மோசடி செய்து வருகின்றனர். அதன்படி ஏடிஎம் இயந்திரத்தில் ஏடிஎம் கார்டு ரீடரை பொருத்துகின்றனர். இதன் மூலம் வாடிக்கையாளர்களின் ஏடிஎம் கார்டை இயந்திரத்தில் சிக்கவைக்கின்றனர். பின்னர் அவர்களே உதவுவது போல நடித்து பின் நம்பரை பெற்றுக்கொள்கின்றனர். பின்னர், கார்டு சிக்கிக்கொண்டது வங்கியை தொடர்பு கொள்ளும்படி கூறுகின்றனர். அதனைத் தொடர்ந்து வாடிக்கையாளர் அங்கிருந்து சென்றவுடன் அந்த பின் நம்பரை வைத்து அதே கார்டில் பணத்தை எடுத்துச் செல்கின்றனர்.