ஆஃபர் பெயரில் மோசடி.. செல்போன் வாங்குபவர்கள் கவனத்திற்கு

63பார்த்தது
திருப்பூர் மாவட்டத்தில் பழைய செல்போன் பாகங்களை கொண்டு, புதிய செல்போன் போல மாற்றி அதனை விற்பனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வார இறுதியில் சம்பளம் பெற்று, பொருட்கள் வாங்க வரும் தொழிலாளர்களை குறிவைத்து, குறைந்த விலைக்கு ஆஃபர் என்ற பெயரில் இந்த விற்பனையானது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனால், போலீசார் பொதுமக்களுக்கு பல்வேறு வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி