முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நீதிமன்றத்தில் ஆஜர்

67369பார்த்தது
முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நீதிமன்றத்தில் ஆஜர்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றி அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட 4வது வழக்கில் நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் அமைச்சரும், ராஜ்யசபா எம்.பி.யுமான சி.வி.சண்முகம் ஆஜரானார். செஞ்சி அருகே கடந்த ஆண்டு நடைபெற்ற அதிமுக பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சி.வி.சண்முகம் அவதூறாக பேசியதாக வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு, விழுப்புரம் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. கடந்த முறை ஆஜராகாத நிலையில் இன்று நேரில் ஆஜரானார். சி.வி.சண்முகம் மீது ஏற்கனவே 3 அவதூறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. சி.வி.சண்முகம் வருகையால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி