வங்கதேச முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் நூருல் ஹுதாவுக்கு செருப்பு மாலை போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கே.எம்.நூருல் ஹுதா உள்ளிட்ட 18 பேர் தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்டதாக, முன்னாள் பிரதமர் கலீதா ஜியா தொடர்ந்த வழக்கில் நூருல் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்படுவதற்கு முன்பாக அவரது வீட்டிற்குள் நுழைந்த கும்பல், அவரை இழுத்து வந்து செருப்பு மாலை போட்டதுடன், செருப்பால் அடிக்கவும் செய்துள்ளனர்.