துப்பாக்கி முனையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற பாஜக முன்னாள் நிர்வாகி நீலகண்டன் கைது செய்யப்பட்டுள்ளார். கோர்ட் உத்தரவை அடுத்து, தலைமறைவான நீலகண்டன் மீது ஆலங்குளம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில், நீலகண்டன் மும்பையில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து, தனிப்படை போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.