சென்னையில் உருவாகப்போகும் காடு - அசத்தல் அறிவிப்பு

50பார்த்தது
சென்னையில் உருவாகப்போகும் காடு - அசத்தல் அறிவிப்பு
சென்னை ஓஎம்ஆர் பகுதியில் பிரம்மாண்ட நவீன வனப்பகுதி உருவாக்கப்பட உள்ளது. இதற்கான திட்டம் தற்போது தொடங்கப்பட்டு உள்ளது. சிறுசேரி அருகே தற்போது உள்ள சிறிய வனப்பகுதி கட்டிட மேம்பாடுகளால் சிதைந்து வருவதால், சி.எம்.டி.ஏ., 50 ஏக்கர் நிலப்பரப்பில், 5 கோடி ரூபாய் மதிப்பில், நகர்ப்புற காட்டுப்பகுதி ஒன்றை உருவாக்குகிறது. தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனத்துடன் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி