மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையில் வெள்ளிக்கிழமை பல இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர். போதைப்பொருள் விற்பவர்களுடன் மேலும் 14 வெளிநாட்டவர்களும் சட்டவிரோதமாக தங்கியிருந்தது கண்டறியப்பட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அப்போது நைஜீரிய நாட்டை சேர்ந்த ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்திக் கொண்டிருந்தபோது, அவர் திடீரென அங்கிருந்து தப்பி ஓடினார். அவரை பிடிக்க போலீசார் பலரும் துரத்திக் கொண்டு ஓடினர். அவர் பிடிபட்டாரா இல்லையா என்பது தெரியவில்லை. இதுதொடர்பான வீடியோ வைரலாக பரவி வருகிறது.