ஒடிசா: பிலேசர்டா கிராமத்தை சேர்ந்த சுதீர் இளம் பெண்ணை மணந்த நிலையில் தற்போது அப்பெண் கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் அந்த ஊருக்கு அப்பெண்ணின் பழைய காதலர் அலோக் வந்துள்ளார். இதை அறிந்த கிராமத்தில் உள்ள அதிகாரப்பூர்வமற்ற தீர்ப்பாயம் கர்ப்பிணி பெண்ணுக்கும், அலோக்குக்கும் அவர்கள் விருப்பமின்றி மிரட்டி கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளது. போலீஸில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என அலோக் கண்ணீருடன் கூறினார்.