கால்பந்து வீரர் நெய்மருக்கு கொரோனா தொற்று உறுதி!

72பார்த்தது
கால்பந்து வீரர் நெய்மருக்கு கொரோனா தொற்று உறுதி!
பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் நெய்மருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை நெய்மருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டது. இதையடுத்து, அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், நெய்மருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சாண்டோஸ் கால்பந்து கிளப் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, அவரை அணியினரிடம் இருந்து தனிமைப்படுத்தி, மருத்துவரின் கண்காணிப்பில் வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி