விந்தணுக்களின் தரத்தை அதிகரிக்க நமது உணவு முறையில் மாற்றங்களை கொண்டு வரலாம். பச்சை காய்கறிகள், கீரைகள், முட்டை வகைகளை அதிகம் எடுத்துக் கொள்ளலாம். முருங்கைப்பூ அதிகம் சாப்பிடலாம். மேலும் பாதாம், பிஸ்தா, முந்திரி, ஏலக்காய், ராஸ்பெரி, ஸ்ட்ராபெரி வாழைப்பழம் போன்றவற்றை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த உணவுகள் பெண்களின் கருமுட்டை வளர்ச்சிக்கும் உதவி புரிகின்றன. ஆரஞ்சு, அவகேடா போன்ற ஆன்ட்டி ஆக்ஸிடென்ட் நிறைந்த பழங்களையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.