உடலின் ஆரோக்கியத்தை சமநிலையாக வைத்துக்கொள்ள நோய் எதிர்ப்பு சக்தி அவசியம். நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையான முறையில், உணவுப் பொருட்கள் மூலம் அதிகரிக்கலாம். உணவில் பூண்டு, இஞ்சி, தயிர், பார்லி, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, காளான்கள், முட்டை, தேங்காய், பெர்ரி பழங்கள், சிட்ரஸ் பழங்கள், எலுமிச்சை, பச்சை காய்கறிகள் மற்றும் கீரைகள் என அனைத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன் உடலின் ஆரோக்கியமும் மேம்படுகிறது.