பாதுகாப்பற்ற உணவுகளால் உலகில் ஆண்டுக்கு 60 கோடி பேர் பாதிக்கப்படுகின்றனர். 4.20 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா, வைரஸ், ரசாயனப் பொருட்கள் கொண்ட உணவு பலவிதமான நோய்களை ஏற்படுத்துகிறது. பொருளாதாரத்துக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. உணவு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஐ.நா. சார்பில் ஜூன் 7இல் உலக உணவு பாதுகாப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.