முதியோர் இல்லத்தில் உணவு ஒவ்வாமை.. 6வது நபர் உயிரிழப்பு

64பார்த்தது
முதியோர் இல்லத்தில் உணவு ஒவ்வாமை.. 6வது நபர் உயிரிழப்பு
தென்காசி: சுந்தரபாண்டியபுரம் பகுதியில் செயல்பட்டு வந்த அன்னை முதியோர் இல்லத்தில் கடந்த 11 ஆம் தேதி மதியம் அசைவ உணவருந்திய சிலருக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 5 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் தற்போது 6வது நபராக செல்வராஜ் (70) என்ற முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 10 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஏற்கனவே முதியோர் இல்லத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி