நாமக்கல் பரமத்தி வேலூர் பகுதியை சுற்றியுள்ள பிழைக்கல்பாளையம், சாணார்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் அதிக அளவில் விவசாயிகள் மல்லிகை பூ சாகுபடி செய்து வருகின்றனர். இதனை பரமத்தி வேலூரில் உள்ள பூ மார்க்கெட்டில் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இன்று காலை நிலவரப்படி தொடர் சுபமுகூர்த்த தினங்கள் இருக்கும் காரணத்தால் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.800-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.