வீட்டில் பறந்து திரியும் ஈக்கள் மற்றும் நீல நிற வகை ஈக்கள் 600 விதமான பாக்டீரியாக்களை பரப்புவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ஈக்களின் கால்கள், இறக்கைகள், பாதங்கள் போன்ற உறுப்புகள் வழியாக பாக்டீரியாக்கள் பரவுகின்றன. அசுத்தமான இடங்களில் அமரும் ஈக்கள் பாக்டீரியாவை ஒட்டிக்கொண்டு மற்ற இடங்களுக்கும் பரப்புகின்றன. இதனால் பல நோய்கள் பரவலாம். எனவே வீட்டையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக பராமரிக்க வேண்டும்.