இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை (பிப்.,6) நாக்பூரில் மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது. டி20 தொடரில் இந்தியா வெற்றியடைந்த நிலையில், ஒருநாள் தொடர் மூலம் இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுக்க இங்கிலாந்து முயற்சிக்கும்.