விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதல்வர் ஆறுதல் தெரிவித்து நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளார். இவ்விபத்தில் உயிரிழந்த சவுண்டம்மாள் (54), கருப்பையா (37) ஆகியோரின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார். மேலும், மருத்துவமனையில் காயத்துடன் சிகிச்சை பெற்று வருவோருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டு இருக்கிறார்.