ஓசூர் அருகே கர்நாடக எல்லைப்பகுதியான அத்திப்பள்ளி வளைவு அருகே உள்ளபட்டாசு கடையில் நேற்று மாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் பலி எண்ணிக்கை14ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், நீதி மய்யம் கட்சியின் தலைவர்
கமல்ஹாசன், “பட்டாசுக்கடை வெடி விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 14 பேர் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன். பலியானவர்களின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த வேதனையைத் தெரிவிக்கிறேன். காயமுற்றோர் விரைந்து குணமடைய விழைகிறேன். பட்டாசு போன்ற எளிதில் தீப்பிடிக்கிற ஆபத்தான பொருட்களைக் கையாள்வதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டுமென்பதே இக்கொடூர விபத்து உணர்த்தும் பாடம்” என தெரிவித்துள்ளார்.