விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சின்னக்காமன்பட்டி பகுதியில் கடந்த 1ஆம் தேதி ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தின் பலி எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது. தனியார் பட்டாசு ஆலை வெடித்து சிதறிய விபத்தில், தொழிற்சாலையில் பணியில் இருந்த 2 பேர் சடலமாக முதலில் மீட்கப்பட்டனர். தொடர்ந்து பலரும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், சிகிச்சைப் பலனின்றி இளைஞர் உயிரிழந்துள்ளார். மேலும் 3 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.