விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்குவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், இந்த விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுபவருக்கு ரூ.1 லட்சம் நிதி வழங்குவதாக அறிவித்துள்ளார். சாத்தூர் பொம்மையாபுரம் அருகே உள்ள சாய்நாத் என்ற பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்து காரணமாக 6 பேர் உயிரிழந்துள்ளனர். வெடிவிபத்தில் 4 கட்டிடங்கள் தரைமட்டமான நிலையில், வேறு யாரும் இடிபாடுகளில் சிக்கியுள்ளனரா என தேடும் பணி தீவிரமாக நடந்துவருகிறது.