கர்நாடகாவில் சாலையில் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்த விபத்தில் 40 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். மைசூர் சாலையில் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தின் முன்பக்கம் திடீரென புகை கிளம்பியுள்ளது. இதனால், பேருந்தை ஓட்டுநர் மெதுவாக நிறுத்த முயன்றபோது தீ பற்றி எரியத் தொடங்கியுள்ளது. தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.