ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதால் நோயாளிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று (ஜன., 02) நள்ளிரவில் மின்கசிவால் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. உடனே உள்நோயாளிகளாக சிகிச்சையில் இருந்த 380க்கும் மேற்பட்ட நோயாளிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. இதனால் நோயாளிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.