சரக்கு கப்பலில் தீ விபத்து.. கடலில் குதித்த பணியாளர்கள் (வீடியோ)

60பார்த்தது
கேரளா மாநிலம் கோழிக்கோடு அருகே சரக்கு கப்பலில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் ஊழியர்கள் கடலில் குதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் இருந்து மும்பைக்கு சரக்கை ஏற்றிவந்த அந்த கப்பலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் அதில் இருந்த 22 பணியாளர்களில் 18 கடலில் குதித்துள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் இந்திய கடலோர காவல் படை மற்றும் கடற்படை கப்பல்கள் ஈடுபட்டுள்ளன. இது குறித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி: News Tamil 24x7

தொடர்புடைய செய்தி