டெல்லியில் உள்ள கரோல் பாக் பகுதியில் விஷால் மெகா மார்ட் செயல்பட்டு வருகிறது. அங்கு திடீரென ஏற்பட்ட தீ விபத்தில், குமார் தீரேந்தர் பிரதாப் சிங் (25) என்ற இளைஞர் உயிரிழந்தார். கட்டடத்தின் 2ஆவது மாடியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையின் போது லிஃப்டில் சிக்கிக் கொண்டது கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.